ஹாமீம்
நம்மைப் பற்றி
2012 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 2ஆம் நாள் அன்று திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம், ஹாமீம்புரம் வடக்குத் தெரு கதவு எண் :16-B/5,
என்ற முகவரியில் வசித்து வரும் (லேட்) V.S.T. செய்யது தாமீம் அவர்களது குமாரர் ஹாஜி V.S.T. சம்சு தப்ரீஸ் ஆகிய என்னால் " ஞானியார் அப்பா ஒலியுல்லாஹ் அறக்கட்டளை " எனப் பெயரிட்டு அறக்கட்டளை ஒன்று தோற்றுவிக்கப்படுகின்றது.
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு நகரில் அவதரித்த சூஃபி ஞானியாகிய ஷெய்கு முகியித்தீன் மலுக்கு முதலியார் என்னும் ஞானியார் சாகிபு
ஒலியுல்லாஹ் அவர்கள், எனது மூதாதையர் காலம் முதலாக எமது குடும்பத்தினரின் ஆன்மீக ஞான குருவாக விளங்கி வருகின்றவர் ஆவார்.
எனது பாட்டனாரும் V.S.T. ஹாமீம் பள்ளி மதரஸாவின்
ஸ்தாபகருமான மர்ஹும் V.S.T. சம்சு தாஸீன் (பங்களா அப்பா ) அவர்கள் குருபிரான் ஹலரத் ஞானியார் சாஹிப் அவர்கள் பேரில்
மிகுந்த பற்றும், பக்தியும் , ஈடுபாடும் உடையவர்கள் ஆவார்.
மர்ஹும் V.S.T. சம்சு தாஸீன் (பங்களா அப்பா )
நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஓலைச் சுவடிகளிலியிருந்து வந்த ஞானக் கருவூலமாம் ஞானியார் அப்பா திருவாய் மலர்ந்தருளிய " மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு" என்ற நூலினை முதன்முதலில் கி.பி. 1895ம் ஆண்டு அச்சிற் பதிப்பித்து வெளியிட பொருளுதவி புரிந்தார்.
ஞானியார் அப்பா தர்கா பள்ளி - ஆஸாத் சாலை, மேலப்பாளையம்.
ஞானியார் அப்பா மேலப்பாளையத்திற்கு வருகை தந்து, கலிமாக்
குளக்கரையில் (ஹாமீம்புரம் அருகே) தங்கியிருந்த இடத்தில் " ஞானியார் அப்பா தைக்காவை"யும்,மேலப்பாளையம் பெரிய தெரு அருகில் (ஆஸாத் ரோட்டின் மேல்புறம்) "ஞானியார் அப்பா தர்கா பள்ளியையும் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சம்சு தாஸீன் அவர்கள் பாங்குற கட்டுவித்தார். இத்தலங்களில் ஞானியார் பாடல் பாராயணம், குரு மகான் துதி, நியம நிஷ்டையனுஷ்டானங்கள் ஆகியன இன்றளவும் இடையறாது நடத்தப் பெற்று வருகின்றது.
சம்சு தாஸீன் அவர்கள் காலஞ்சென்ற பின்னர் அவரது மகனார்
V.S.T. செய்யது தாமீம் அவர்கள் மேற்கண்ட தர்காக்களை சிறப்புடன்
நிர்வகித்து நடைபெற வேண்டிய கைங்கரியங்களை நடத்தி வந்தார். செய்யது தாமீம் அவர்களது மறைவிற்குப் பின்னர் அவரது மகனும் V.S.T. ஹாமீம் பள்ளி மதரஸாவின் ஹக்தாருமாகிய ஹாஜி V.S.T. சம்சு தப்ரீஸ் அவர்கள் தம் முன்னோர் அடியொற்றியே மேற்படி நிர்வாகத்தை
சிறப்புடன் நடத்தி வருகின்றார்.
மர்ஹும் V.S.T. செய்யது தாமீம்
மர்ஹும் ஹாஜி V.S.T. சம்சு தப்ரீஸ்
குருமகான் ஞானியார் அப்பா அவர்கள் மற்றும் அன்னாரைப் போன்ற
மெய்ஞ்ஞானியர் அருளிய ஞான நூற் கருவூலங்களின் வாயிலாக மனித சமூகம் சிறந்த பயனும், ஆத்ம லாபமுமடைய வேண்டுமென்ற எனது அபிலாஷை (கொள்கை) நன்முறையில் நிறைவேறுவதை
நோக்கங்களாக கொண்டு இந்த அறக்கட்டளையானது அதன் நோக்கங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதற்காக தனி உரிமையுடைய
குடும்ப அறக்கட்டளை (Private Family Trust) யாக என்னால் தொடங்கப்படுகிறது.
இந்த அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான என்னால் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள அறங்காவலர் குழு ஏழு உறுப்பினர்களைக்
கொண்டதாகும்.
அறங்காவலர் குழு :-
- மர்ஹும் ஹாஜி V.S.T. சம்சு தப்ரீஸ்
- மர்ஹும் ஹாஜிமா V.S.S. அசன் பாத்திமா
- V.S.T. அமீர் அம்சா ( செயலர் )
- V.S.T. அமானுல்லாஹ் D.C; ( பொருளாளர் )
- V.S.T. சலீம் பாதுஷா M.com;Mphil;B.A; B.Ed;
- V.S.T. செய்யது தாமீம்
- V.S.T.ஷராப்பதுல்லாஹ்
- இல்லம்
- நம்மைப்பற்றி
- வரலாற்றுக்குறிப்புகள்
- ஞான அம்மானை
- இலக்கிய உத்திகள்
- சாஹிபு பாடல்கள்
- புகைப்படங்கள்
- முகவரி
தர்கா நிர்வாகிகள்
- மர்ஹும் V.S.T. சம்சு தாஸீன்
- மர்ஹும் V.S.T. செய்யது தாமீம்
- மர்ஹும் ஹாஜி V.S.T.சம்சு தப்ரேஸ்
- V.S.T. அமீர் அம்சா
கிலாபத்
- ஞானியார் சாஹிபு
- இளைய ஞானியார் சாஹிபு
- __ ஆண் வழி முறையினர்
கடவுள் துதி
பூரணம் நிறைந்து பொங்கிப் புகழொளி
மணிய தாகிக்
காரணம் நிறைந்து நின்றங் கருத்துறு
கிருபை பொங்கி
ஆரணம் மறைநூல் வேதத் தருமுறை
தனக்கு மூலச்
சீரணத் திறசூல் தம்மைச் செவ்வென வமைத்தான் வல்லோன்
- கோட்டாறு ஞானியார் சாஹீப்
ஹஸரத் ஞானியர் அப்பா தர்கா பள்ளியில் திருப்பாடல், பணிவிடை நடைபெறும் விசேஷ இரவுகள்
- பிரதி வியாழன் மாலை வெள்ளி இரவுகள்
- நிறை பிறை இரவு
- 14 ஆம் இரவு
- மகான்கள் நினைவு தினங்கள்