ஞானியார் அப்பா ஒலியுல்லாஹ் அறக்கட்டளை
ஹாமீம்
அறக்கட்டளையின் நோக்கங்கள் :
- ஞானியார் அப்பா அவர்களால் போதிக்கப்பட்டு, இன்றளவும் நடைமுறையிலிருந்து வரும் அன்னாரது குருபிரான் ஹுசைன் இப்னு மன்சூர்
ஹல்லாஜ் (ரஹ்) அவர்களது ஆன்மீக ஞான வழி
முறை System of Spirituality நன்முறையில் பரவிச் சிறந்து விளங்கிட
முயற்சிகள் மேற்கொள்ளுதல்.
- குருமகான் கோட்டாறு, ஞானியார் அப்பா அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய " மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு " எனும் ஞான நூல் புதிய பதிப்புகள் கண்டிட முயற்சிகள் மேற்கொள்ளுதல்.
- மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு நூலினை முதன்முதலாக அச்சில் பதிப்பித்த போது சில பாடற்பகுதிகள் விடுபட்டும், குறைந்தும், முற்றுப் பெறாமலும் இருந்துள்ளன. நிறைவு பெற்ற ( ஒலைச்சுவடிப் ) பிரதகள் கிடைக்குமாயின் மறுபதிப்பில் அவற்றைப் பிரசுரித்திட ஆவன செய்தல்.
- ஞானியார் அப்பா அவர்களது திருப்பாடல்களில் இடம் பெற்றுள்ள அருஞ்சொல் மற்றும் சொற்றொடர்களுக்கு குரு பாரம்பரிய வழி முறையில் வழங்கி வருகின்ற உத்தேசக் கருத்துரைகளை வெளியீடு செய்தல்.
- குருமகான் அவர்களது வரலாற்றுக்குறிப்புகள், அன்னார் அருளிய திருப்பாடற் பகுதிகள் முதலியன பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டங்களில் இடம் பெற்றிடும் வகையில் தமிழக அரசு ஆணை பிறப்பித்திடத் தேவையான நடவடிக்கைககளை மேற்கொள்ளுதல்.
- குருமகான் அவர்கள் அருளிய திருப்பாடற்றிரட்டின் நூற்பிரிவுகள் அனைத்தும் ஆய்வு செய்ப்படுவதற்குத் தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ளுதல்.
- நூலருப்பெறாத நிலையிலுள்ள மெய்ஞ்ஞான இலக்கியங்களை அச்சில் பதிப்பித்திடவும், மறுபதிப்பு கண்டிராத அரிய ஞான நூற்களை மறுபதிப்பு செய்திடவும் முயற்சிகள் மேற்கொள்ளுதல் .
- பக்தி, ஞான இலக்கியங்களைப் பற்றி ஆய்வரங்குகள், கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து நடத்துதல்.
- மெய்ஞ்ஞான இலக்கியங்களுக்கென்று தனி இருக்கைகளை (Separate Chairs) பல்கலைக்கழகங்களில் நிறுவச் செய்தல் .
- சூஃபிஸம், சித்தர் இயல், பக்தி, ஞான நெறி சார்ந்த இலக்கியங்களில் பொதிந்து கிடக்கும் பொதுமை நலச் சிறப்புகளை ( Facts seem to be common) நல்அறிஞர்களின் துணை கொண்டு சொற்பொழிவுகள், நூல்கள் வாயிலாக வெளியிடுதல்.
- ஞானியார் சாஹிபு அவர்களது நினைவு நாளினை,அன்னார் பிறந்து, வாழ்ந்து,சமாதியுற்றிக்கும் நகராகிய கோட்டாறு அமைந்திருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அரசு அறிவித்திடவும் அன்றைய தினம், அன்னாரது பெயரால் தர்காக்கள் அமைந்துள்ள மேலப்பாளையம், தற்கலை, கமுதி ஆகிய ஊர்களிலிருந்தும், மேலும் அன்னாரது சீடர்கள் வாழ்ந்து வரும் ஆளூர், திட்டுவிளை, தோவாளை ஆகிய ஊர்களிலிருந்தும் பக்தர்கள் கோட்டாறு சென்று வருவதற்கு சிறப்பு பேருந்து வசதிகளை அரசு செய்து தருவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- எமது அறக்கட்டளையின் நோக்கங்களை நிறைவேற்றத் துவங்கும் முகமாக அறக்கட்டளையின் சார்பில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஞானியார் சாஹிபு அவர்களது வரலாற்றுக் குறிப்புகள், திருப்பாடல்கள், பாடற் சொற்பொருள் விளக்கம் போன்றவற்றிலிருந்து தேர்வுகள் நடத்தி அன்னாரது வருடாந்திர கந்தூரி வைபவ நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது பரிசுகள் வழங்குதல்.
- ஞானியார் சாஹிபு அவர்களின் வருடாந்திர கந்தூரி வைபவம் நடைபெறும் தினங்களில் அவர் தம் திருப்பாடல்கள் பாராயணம், அவை குறித்த சொற்பபொழிவுகள் முதலானவை நடைபெறச் செய்தல்.
- ஞானியார் சாஹிபு அவர்களைப் புகழ்ந்து அன்னாரது சீடர்களும், சாஹிபு அவர்களது பெண் வழிப்பேரர் சதாவதானி கா.ப. செய்கு தம்பி பாவலர் அவர்களும், ஏனைய தமிழ்ப் புலவர்களும் பாடிய பக்திப் பாமாலைகள் அனைத்திற்கும் உரையுடன் கூடிய பதிப்புகள் காண முயற்சிகள் மேற்கொள்ளுதல். மேலும் பாமாலைகள் பாடியோரின் நினைவினைப் போற்றும் வண்ணம் விழா நடத்துதல்.
- ஞானியார் அப்பா அவர்களது வரலாறு, திருப்பாடல்கள் போன்றவை சிறார்களின் நெஞ்சங்களில் இடம் பெறச் செய்யும் விதமாக சிறார் பள்ளி ஒன்றினை நிறுவி நடத்தி வர ஆவன செய்தல் .
- இறையருட் செல்வர்களது பிறப்பிடம், வாழ்விடம், சமாதி உறைவிடம் முதலானவற்றுக்கு நேரில் சென்று கள ஆய்வுகள் செய்து அன்னோர் தொடர்பான செய்திகளைத் தொகுத்து வெளியிடுதல்.
- இறையருட்கவிஞர்களாகிய மெய்ஞ்ஞானியரது வரலாற்றுக் குறிப்புகள், திருப்பாடல்கள், அவற்றின் பொருளமைதி குறித்த தகவல்கள் போன்றன தமிழ் பேசும் மக்களைச் சென்றடையும் வகையில் " ஞான மணி மாலை" என்ற பெயரில் இதழ் ஒன்றினை நடத்துதல் .
- எமது நோக்கங்கள் சீரிய முறையில் நிறைவேறுவதற்கு தேவையான ஒத்துழைப்பு மற்றும் நல்ஆலோசனைகளை தக்கவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுதல் .
- இல்லம்
- நம்மைப்பற்றி
- வரலாற்றுக்குறிப்புகள்
- ஞான அம்மானை
- இலக்கிய உத்திகள்
- சாஹிபு பாடல்கள்
- புகைப்படங்கள்
- முகவரி
தர்கா நிர்வாகிகள்
- மர்ஹும் V.S.T. சம்சு தாஸீன்
- மர்ஹும் V.S.T. செய்யது தாமீம்
- மர்ஹும் ஹாஜி V.S.T.சம்சு தப்ரேஸ்
- V.S.T. அமீர் அம்சா
கிலாபத்
- ஞானியார் சாஹிபு
- இளைய ஞானியார் சாஹிபு
- __ ஆண் வழி முறையினர்
கடவுள் துதி
பூரணம் நிறைந்து பொங்கிப் புகழொளி
மணிய தாகிக்
காரணம் நிறைந்து நின்றங் கருத்துறு
கிருபை பொங்கி
ஆரணம் மறைநூல் வேதத் தருமுறை
தனக்கு மூலச்
சீரணத் திறசூல் தம்மைச் செவ்வென வமைத்தான் வல்லோன்
- கோட்டாறு ஞானியார் சாஹீப்
ஹஸரத் ஞானியர் அப்பா தர்கா பள்ளியில் திருப்பாடல், பணிவிடை நடைபெறும் விசேஷ இரவுகள்
- பிரதி வியாழன் மாலை வெள்ளி இரவுகள்
- நிறை பிறை இரவு
- 14 ஆம் இரவு
- மகான்கள் நினைவு தினங்கள்