ஹாமீம்
நன்றி நவிலல்
எமது அறக்கட்டளைக்கு நல்ஆதரவினையும், அதன் நோக்கங்கள் நன்முறையில் நிறைவேறிட ஆலோசனைகளையும், வாழ்த்துக்களையும் வழங்கி வரும் கோட்டாறு ஞானியார் சாஹிபு தர்காவின் பட்டத்து சாஹிபு வாப்பா ஜனாப். ஞா.செ.அஹமது ஹுசைன் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியினை சமர்ப்பிக்கின்றோம்.
எமது அறக்கட்டளையின் நிறுவனர் & நிர்வாக அறங்காவலர் அவர்களது மகன் இளமுனைவர் V.S.T. சலீம் பாதுஷா M.Com; M.Phil; B.A; B.Ed;
அவர்களது துணைவியார் இளமுனைவர் திருமதி. ஒ.இ . ஸாஜிதா பேகம்
M.A; M.Phil; B.Ed; அவர்களால் செப்டம்பர் திங்கள் 2007 ம் ஆண்டு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக எம்பில் (M.Phil.)
பட்டத்திற்காக அளிக்கப் பெற்ற " ஞானியார் அப்பாவின் ஞான அம்மானை " என்ற ஆய்வேட்டில் உள்ள ஐந்து இயல்களில் " ஞானியார் அப்பாவின் ஞான அம்மானை" மற்றும் " இலக்கிய உத்திகள் " ஆகிய
இரண்டு இயல்களுடன், ஞானியார் சாஹிபு தொடர்பான வரலாற்று நிகழ்வுகளையும், செய்திகளையும், தகவல்களையும் தொகுத்து இணைய தளத்திலும், நூலுருவிலும் வெளியிடுவதில் எமது
அறக்கட்டளை பெருமகிழ்ச்சியடைகின்றது.
ஆய்வேட்டில் இடம் பெற்றுள்ள இவ்விரு இயல்களையும் எமது இணைய தளத்தில் வெளியிடவும், நூலுருவிலும் பதிப்பித்திடவும் அனுமதி அளித்ததுடன் பதிப்புரிமையையும் மனமுவந்து எமது அறக்கட்டளைக்கு வழங்கிய இளமுனைவர் திருமதி. ஒ.இ. ஸாஜிதா பேகம் M.A; M.Phil; B.Ed; அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றோம். மேலும் எமது அறக்கட்டளையின் ஏனைய நோக்கங்களும் இனிதே நிறைவேறிட , குரு மகான் ஹலரத் ஞானியார் சாஹிபு அவர்களைத் துதித்து, இறையருளை வேண்டுகின்றோம்.
வாழ்க ஞானியார் அப்பா அவர்களின் புகழ்! வளர்க ஹல்லாஜியா தரீக்கா !
இவண்
ஞானியார் அப்பா ஒலியுல்லாஹ் அறக்கட்டளை
செயலர்
V.S.T. அமீர் அம்சா
- இல்லம்
- நம்மைப்பற்றி
- வரலாற்றுக்குறிப்புகள்
- ஞான அம்மானை
- இலக்கிய உத்திகள்
- சாஹிபு பாடல்கள்
- புகைப்படங்கள்
- முகவரி
தர்கா நிர்வாகிகள்
- மர்ஹும் V.S.T. சம்சு தாஸீன்
- மர்ஹும் V.S.T. செய்யது தாமீம்
- ஹாஜி V.S.T. சம்சு தப்ரேஸ்
- கோட்டாறு ஞானியார் சாஹீப்
ஹஸரத் ஞானியர் அப்பா தர்கா பள்ளியில் திருப்பாடல், பணிவிடை நடைபெறும் விசேஷ இரவுகள்
- பிரதி வியாழன் மாலை வெள்ளி இரவுகள்
- நிறை பிறை இரவு
- 14 ஆம் இரவு
- மகான்கள் நினைவு தினங்கள்