ஹாமீம்
வாழ்த்துரை
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
ஹாமீம்
கோட்டாறு , மெய்ஞ்ஞான சொரூபர் ஹலரத் ஷெய்கு முஹ்யித்தீன் மலுக்கு முதலியார் ஞானியார் சாஹிபு (ஒலி) அவர்களது பரம்பரையில் வந்த ஆதீன கர்த்தா பட்டத்து சாஹிபு வாப்பா ஆலி ஜனாப். ஞா.செ. அஹமது ஹுசைன் அவர்கள் மனமுவந்து அளித்த
வாழ்த்துச் செய்தி
நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் வாழ்ந்து சிறந்திருந்தவரும் ஞானியார் சாஹிபு ஒலியுல்லாஹ் அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய மெய்ஞ்ஞான திருப்பாடற்றிரட்டினை முதன்முதலாக ஒலைச்
சுவடிகளிலிருந்து நூலுருவில் பதிப்பிப்பதற்கு மனமுவந்து நன்கொடை
புரிந்தவருமாகிய வள்ளல் பெருந்தகை V.S.T. சம்சு தாஸீன் தரகனார் அவர்களது முன்னோரது காலம் தொடர்ந்தே அன்னவரது குடும்பத்தினர் நமது ஞானியார் சாஹிபு (ஒலி) அவர்களது ஆன்மீக வழி சீடர்களும் பக்த நேசர்களும் ஆவர். அன்னாரது மகனாராகிய காலஞ் சென்ற V.S.T. செய்யது தாமீம் அவர்களது மகனும் மேலப்பாளையம் V.S.T. ஹாமீம் பள்ளி மதரஸா மற்றும் மெய்ஞ்ஞான
சொரூபர் ஞானியார் அப்பா ஒலியுல்லாஹ் தர்கா பள்ளி ஆகியவற்றின் ஹக்தாருமாகிய ஹாஜி V.S.T. சம்சு தப்ரேஸ் அவர்கள் " ஞானியார் அப்பா ஒலியுல்லாஹ் அறக்கட்டளை " என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றினை நிறுவியுள்ள செய்தியறிந்து மிக்க மகிழ்வடைகின்றேன்.
- ஞானியார் சாஹிபு அவர்களது " மெய்ஞ்ஞான திருப்பாடற்றிரட்டு" எனும் பனுவலுக்கு புதிய பதிப்புகள் காணுதல்.
- திருப்பாடல்களின் பொருளமைதி, கருத்துரைகளை பாரெங்கும் பரவிடச் செய்தல்.
- ஞானியார் அப்பா அவர்களைப் பற்றிய பாடப்பகுதிகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டங்களில் இடம் பெறச் செய்தல்.
- இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்களுக்கென பல்கலைக் கழகங்களில் பிரத்யேக இருக்கைகளை நிறுவச் செய்தல்.
- இறையருட் செல்வர்களது பிறப்பிடம், வாழ்விடம், சமாதி உறைவிடம் முதலானவற்றுக்கு நேரில் சென்று கள ஆய்வுகள் செய்து அன்னோர் தொடர்பான செய்திகளைத் தொகுத்து வெளியிடுதல்
- சதாவதானி கா.ப. செய்கு தம்பி பாவலர் அவர்களுக்கு விழா எடுப்பித்தல்.
முதலான சீரிய நோக்கங்களை இவ்அறக்கட்டளை செயல்படுத்துவதற்கு முனைந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
அறக்கட்டளையின் நிறுவனர் அவர்களது மகனாகிய இளமுனைவர் V.S.T. சலீம் பாதுஷா MCom;M.Phil;B.A;B.Ed அவர்களது துணைவியார் இளமுனைவர் ஒ.இ. ஸாஜிதா பேகம்.M.A; M.Phil;B.Ed அவர்கள்
" ஞானியார் அப்பாவின் ஞான அம்மானை " என்ற தலைப்பில் M.Phil பட்டத்திற்காக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு செப்டம்பர் திங்கள் - 2007 ம் ஆண்டு அளித்த ஆய்வேட்டிலுள்ள "ஞானியார் அப்பாவின் ஞான அம்மானை " மற்றும் " இலக்கிய உத்திகள்" ஆகிய இரண்டு இயல்களுடன் ஞானியார் சாஹிபு தொடர்பான வரலாற்று நிகழ்வுகளையும், செய்திகளையும், தகவல்களையும் தொகுத்து நூலுருவிலும் அவர்களது அறக்கட்டளையின் இணைய தளத்திலும் வெளியிடுவது குறித்து மகிழ்வுடன் பாராட்டுகின்றேன்.
ஞானியார் அப்பா ஒலியுல்லாஹ் அறக்கட்டளையின் நற்பணிகள் மென்மேலும் சிறந்து விளங்கிட இறையருளை வேண்டியவனாக மனமுவந்து வாழ்த்துகின்றேன்.
ஞா.செ. அஹமது ஹுசைன்
- இல்லம்
- நம்மைப்பற்றி
- வரலாற்றுக்குறிப்புகள்
- ஞான அம்மானை
- இலக்கிய உத்திகள்
- சாஹிபு பாடல்கள்
- புகைப்படங்கள்
- முகவரி
தர்கா நிர்வாகிகள்
- மர்ஹும் V.S.T. சம்சு தாஸீன்
- மர்ஹும் V.S.T. செய்யது தாமீம்
- ஹாஜி V.S.T. சம்சு தப்ரேஸ்
கிலாபத்
- ஞானியார் சாஹிபு
- இளைய ஞானியார் சாஹிபு
- __ ஆண் வழி முறையினர்
கடவுள் துதி
பூரணம் நிறைந்து பொங்கிப் புகழொளி
மணிய தாகிக்
காரணம் நிறைந்து நின்றங் கருத்துறு
கிருபை பொங்கி
ஆரணம் மறைநூல் வேதத் தருமுறை
தனக்கு மூலச்
சீரணத் திறசூல் தம்மைச் செவ்வென வமைத்தான் வல்லோன்
- கோட்டாறு ஞானியார் சாஹீப்
ஹஸரத் ஞானியர் அப்பா தர்கா பள்ளியில் திருப்பாடல், பணிவிடை நடைபெறும் விசேஷ இரவுகள்
- பிரதி வியாழன் மாலை வெள்ளி இரவுகள்
- நிறை பிறை இரவு
- 14 ஆம் இரவு
- மகான்கள் நினைவு தினங்கள்